உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் விடுபட்டு இருந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்றது.
இந்த தேர்தலுக்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் தொடங்கி கடந்த 15ஆம் தேதி முதல் நேற்று வரையில் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த வந்த மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் மற்றும் ஆலோசனை கூட்டங்களை முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் திருப்பத்தூரிலிருந்து ஆரம்பித்து இருக்கின்றார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக ஆலோசனை கூட்டத்தில் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான கே சி வீரமணி மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இதன் பின்னர் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாம் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ளோம். தற்போது நடைபெறும் திமுக ஆட்சியும் தில்லுமுல்லுகளை பொது மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் மறந்துவிட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் எதிர்க்கட்சியான நம்மை பழிவாங்குவதுலேயே முழுநேரமும் திமுக தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறது என்று கூறியிருக்கிறார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது உரையாற்றிய ஸ்டாலின் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார். ஆனாலும் தற்சமயம் கூட்டுறவு வங்கிகளில் மட்டும் தள்ளுபடி என கூறுகிறார்கள் இருக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள்.
நீட் தேர்வு எழுத அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது. அதோடு அந்த மாணவர்களுடைய கல்வி செலவை அரசு ஏற்றுக்கொண்டது. நம்முடைய ஆட்சியில் கிராமங்களுக்கு செய்த சாதனைகளை தெரிவித்து பொதுமக்களிடம் ஓட்டு கேளுங்கள். அதேசமயம் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது தொடர்பாக பொதுமக்களிடம் எடுத்துக் கூறுங்கள் என்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நான்கு மாத ஆட்சியில் வேலை என்னவென்றால் திமுகவை சேர்ந்தவர்கள் மீது வழக்குப் போடுவது, அவதூறு பிரச்சாரம் மேற்கொள்வது, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரைட் நடத்துவது, உள்ளிட்டவை நான் அவர்களுடைய பணியாக உள்ளது. வாக்களித்த மக்களை பற்றி சிந்திக்க நேரமில்லை பொது மக்களுக்கு எந்த நன்மையும் இந்த நான்கு மாதத்தில் நடைபெறவில்லை என கூறியிருக்கிறார்.
நானும் தான் நான்காண்டு காலம் மற்றும் இரண்டு மாதம் முதல் அமைச்சராக இருந்தேன் நாங்கள் நினைத்திருந்தால் எவ்வளவு வழக்குகளை உங்கள் மீது போட்டு எடுக்கலாம்? நாங்கள் அப்படி செய்தோமா? இல்லை என தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி கேட்ட அதிமுகவினர் சற்றே அதிர்ந்து போயினர்.