Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வங்கியில் ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்பவரா நீங்கள்? இதோ மத்திய அரசு வெளியிட்ட கறார் அறிவிப்பு!

Cash

Cash

ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்ற நடவடிக்கையை மத்தியரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி அறிவித்தது. ஆனால் அப்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சம் தொட்டதால் லாக்டவுன் நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டிருந்தன. எனவே அந்த அறிவிப்பிற்கான கால அவகாசத்தை 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதற்கு மேல் ஆதார் எண்னுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என ஏற்கனவே மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில் நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வரும் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காவிட்டால் ஏப்ரல் 1ம் தேதி முதல் பான்கார்டு செயலிழப்பு செய்யப்பட்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பான் கார்டை ஆதார் எண்ணுடம் இணைக்காதவர்களுக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் புதிய வங்கி கணக்குகளை திறக்க முயற்சித்தாலோ, ரூ.5000 க்குள் மேல் டெபாசிட் செய்யச் சென்றாலோ பான் கார்டு கட்டாயம் ஆகும். எனவே அப்படிப்பட்ட செயல்பாடுகளுக்காக வங்கிகளுக்கு உங்களுடைய பான் கார்டை கொண்டு செல்லும் போது, அது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாததால் செயழிலந்து இருந்தால் உங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

எஸ்.எம்.எஸ். மூலமாக கூட பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம். அதற்கு 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். யுஐடிபான் (UIDAIPAN) என்று டைப் செய்து, இடம் விட்டு உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து மீண்டும் இடைவெளி விட்டு 10 இலக்க பான் கார்டு நெம்பரை டைப் செய்யது மேலே குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு அனுப்ப வேண்டும். அதன் பின்னர் உங்களுடைய பான் கார்டு எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை http://incometaxindiaefiling.gov.in/aadhaarstatus. என்ற இணையத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Exit mobile version