Pan card வைத்திருப்பவர்களுக்கு ரூ 10,000 அபராதம்:? மக்களே இன்றே செய்து முடியுங்கள்! வருமான வரித்துறை எச்சரிக்கை!

0
103

Pan card வைத்திருப்பவர்களுக்கு ரூ 10,000 அபராதம்:? மக்களே இன்றே செய்து முடியுங்கள்! வருமான வரித்துறை எச்சரிக்கை

வருமானவரி துறை சமீபத்தில் நிரந்தர கணக்கு எண் அதாவது பான் கார்டு – யை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.இதற்கான காலக்கெடு மார்ச்-30 2020 வரை இருந்தது.மேலும் இந்த தேதிக்குள் பான் கார்டு ஆதார் எண்ணுடன்
இணைக்கவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை எச்சரித்திருந்தது.

ஆனால் கொரோனாத் தொற்று காரணமாக பான் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கும் கடைசி தேதியை வருமான வரித்துறை வருகின்ற மார்ச் 31 2021 வரை நீடித்துள்ளது.தற்போது இதைத்தொடர்ந்து பான் கார்டு குறித்து மற்றொரு அதிரடி உத்தரவு ஒன்றினை வருமான வரித்துறை பிறப்பித்துள்ளது.அது என்னவென்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் வைத்திருப்பது சட்டவிரோதமானது என்றும், மேலும் விரைவில் பான் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கத் தவறினால் ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் வருமான வரி துறை எச்சரித்துள்ளது.