பான் கார்டு வைத்துள்ளவர்கள் உடனே இதை உறுதி செய்ய வேண்டும்! இல்லையெனில் 10 ஆயிரம் அபராதம்

0
170
மத்திய அரசு முக்கிய அறிவிப்பு இரண்டு பான் கார்டு பயன்படுத்தினால் தண்டனை

பான் கார்டு வைத்துள்ளவர்கள் உடனே இதை உறுதி செய்ய வேண்டும்! இல்லையெனில் 10 ஆயிரம் அபராதம்

வருமான வரியை செலுத்த மற்றும் தனி நபர் வருமானத்தை கண்காணிக்க பான் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பான் கார்டை அடையாள அட்டையாகவும் பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முலம் அதிக அளவிலான பண பரிவர்த்தனைகளை எளிதாக கண்காணிக்க முடியும்,  பான் கார்டு நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும்.

நம்முடைய அனைத்து விதமான வரவு செலவு கணக்குகள் அனைத்துமே பான் கார்டு முலம் கண்காணிக்கப்படுகிறது.  இரண்டு பான் கார்டு பயன்படுத்தினால் தண்டனை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வருமான வரித்துறை விதிகளின்படி ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருப்பது சட்டப்படி குற்றம். மேலும் ஒரு தனிநபர் அவர்களின் பெயரில் வழங்கப்பட்ட ஒரே பான் கார்டு மட்டுமே பயன்படுத்த முடியும் .

ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது வருமான வரிச்சட்டம், 1961 இன் பிரிவு  272B இன் படி, தகவல் தொழில்நுட்பத்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தனிநபர் மீது 10,000 அபராதமாக விதிக்கப்படலாம். எனவே தனிநபர் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான காலஅவகாசம் தொடர்த்து  நீடிக்கப்பட்டது. தற்போது  ஜூன் 30 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் இல்லையென்றல் உங்கள்  பான் கார்டு செயலாற்றதாகி விடும்.

அப்படி ஆகும் பட்சத்தில் லோன் எடுப்பது, வருமான வரி தாக்கல் செய்வது அனைத்தும் சிக்கலாகும்.

அதன்பின் வரும் ஜூன் 31 ஆம் தேதிக இணைக்கும் போது 1000 ரூபாய் செலுத்தி  வேண்டும் பான் கார்டை இணைக்க வேண்டும். இல்லையென்றல் உங்கள்  பான் கார்டு செயலாற்றதாகி விடும்.