“பருப்பு சட்னி” இப்படி செய்தால் அட்டகாசமான இருக்கும்.. 10 இட்லி பத்தாது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
92
#image_title

“பருப்பு சட்னி” இப்படி செய்தால் அட்டகாசமான இருக்கும்.. 10 இட்லி பத்தாது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

நம் விருப்ப உணவுகளில் ஒன்றான இட்லி மற்றும் தோசைக்கு வித்தியாசமாக பருப்பு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.ஒரு முறை செய்து ருசி பார்த்து விட்டால் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட தூண்டும்.

இந்த பருப்பு சட்னியை குறைந்த நேரத்தில் செய்து விட முடியும்.இந்த சட்னி சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*கடலை பருப்பு – 1 தேக்கரண்டி

*உளுந்து பருப்பு – 2 தேக்கரண்டி

*கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி

*வர மிளகாய் – 4 முதல் 5

*வெந்தயம் – 1/4 தேக்கரண்டி

*பெரிய வெங்காயம் – பாதி

*பூண்டு – 5 அல்லது 6 பற்கள்

*சாம்பார் வெங்காயம் – 8 முதல் 10

*புளி – எலுமிச்சம் பழ அளவு

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*தேங்காய்(துருவல்) – 3 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 1கொத்து

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் கடாய் வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அவற்றை சூடு படுத்தவும்.பின்னர் அதில் கொத்தமல்லி விதை 1 தேக்கரண்டி,உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி,கடலைப் பருப்பு 1 தேக்கரண்டி,வர மிளகாய் 4 முதல் 5,1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.மிதமான தீயில் வைத்து 2 முதல் 3 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் இந்த கலவையை நன்கு ஆற விடவும்.பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அவற்றை சூடு படுத்தவும்.பின்னர்
8 முதல் 10 சின்ன வெங்காயம்,பாதி பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும்.பிறகு பூண்டு 5 முதல் 6 பற்கள்,கருவேப்பிலை,புளி,தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.பின்னர் இந்த கலவையை நன்கு ஆற விடவும்.பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.அதன் பின் ஏற்கனவே அரைத்து வைத்த கலவையை அதில் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

இதை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ளவும்.அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் அதில் 1/2 தேக்கரண்டி கடுகு, கருவேப்பிலை,உளுந்து பருப்பு 1 தேக்கரண்டி போட்டு பொரிய விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து தாளித்து வைத்துள்ளதை அரைத்த விழுதுகளில் சேர்த்து கலக்கி கொள்ளவும்.