இந்திய அரசாங்கம் இந்திய குடிமக்களுக்கு பல்வேறு வகையான அடையாள அட்டைகளை வழங்கி வருகிறது. அதில் முக்கிய அட்டைகளில் ஒன்று தான் பான் கார்டு. தற்போது பான் கார்டு இல்லாமல் ஒரு வங்கி கணக்கு தொடங்குவது அல்லது பண பரிவர்த்தனை செய்வது மற்றும் டெபாசிட் செய்வதற்கும் முக்கிய ஆவணமாக பான் கார்டு (pan card new rules 2024) திகழ்கிறது.
இந்நிலையில் தான் வருமான வரித்துறையினரால் வழங்கப்படும் பான் கார்டு ஒரு தனி நபர் அல்லது தனி நிறுவனம் யாராக இருந்தாலும் அவர்களின் நிதி பரிவர்த்தனை கண்காணிப்பதற்காக 10 இலக்கங்கள் கொண்ட இந்த அட்டையை வழங்கி உள்ளது.
பொதுவாக வங்கியில் அல்லது தபால் நிலையங்களில் கணக்கு தொடங்குவதற்கு இந்த பான் கார்டு கேட்கப்படுகிறது. மேலும் வங்கியில் பணம் செலுத்துவதற்கு பான் கார்டு கட்டாயம் அல்ல. இருந்து பொழுதிலும் ஒரு தனி நபர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் கட்டாயம் பான் கார்டு அவசியம்.
அதன்படி ஒரு ஆண்டில் ரூ.20 லட்சத்திற்கும் மேல் பண பரிவர்த்தனை செய்தாலோ அல்லது பணம் டெபாசிட் செய்தாலோ வாடிக்கையாளரின் பான் கார்டு விவரங்கள் மற்றும் ஆதார் கார்டின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி வங்கியில் அல்லது தபால் நிலையங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு நிதியாண்டில் ரூ. 25 லட்சத்திற்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் அவர்கள் பான் கார்டு அல்லது ஆதரவு விவரங்களை கொடுப்பது கட்டாயமாகும். ரூபாய் 20 லட்சம் என்பது ஒரு நிதியாண்டில் பணம் டெபாசிட் செய்வது அல்லது பணம் எடுத்தல் ஆகியவையின் மொத்த கூட்டு தொகையாகும்.
எனவே அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 7 நாட்களுக்கு முன்பாக பான் எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இல்லையென்றால் பண பரிவர்த்தனையின் போது இ -பான் கார்டு சமர்ப்பிப்பது அவசியமாகும்.
இந்தப் புதிய விதி கூட்டுறவு வங்கிகளில் செயல்படும் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.
மேலும் படிக்க: பாடவேளை மற்றும் விடுமுறையில் மாற்றம்.. பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும் குட் நியூஸ்!!