Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை?

கடலூர் மாவட்டம் கீழஅருங்குணம் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருபவர் நிலவழகன் என்னும் சுபாஷ். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.இந்நிலையில் இவர் நேற்று ஒரு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நெல்லிக்குப்பம் காவல்துறையினர் இந்த கொலை குறித்து முன் பகையினால் இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இவர் கொலை செய்யப்பட்டாரா? என்னும் கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்றும் பல வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version