Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் – ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு 

#image_title

பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் – ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு 

பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம்- ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பௌர்ணமி, ஒவ்வொரு மாதம் வரும் பௌர்ணமி கிரிவலம் உலகப் பிரசித்தி பெற்றது. குறிப்பாக கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் சித்ரா பௌர்ணமி ஆகிய இரண்டு தினங்களில் சுமார் 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் மலையையே சிவனாக கருதி கிரிவலம் மேற்கொள்வார்கள்.

அதே போன்று மாதா மாதம் வரும் பௌர்ணமி தினத்தன்று சுமார் மூன்று லட்சம் முதல் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தமிழக மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொள்வார்கள்.

இன்று பங்குனி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் நண்பகல் முதலே கிரிவலம் மேற்கொண்டனர்.பங்குனி மாத பௌர்ணமி புதன்கிழமை இன்று காலை 10.15 மணிக்கு துவங்கி நாளை வியாழக்கிழமை காலை 10.45 மணிக்கு நிறைவடையும் என்ற நிலையில் இன்று காலை முதல் உள்ளூர், வெளிமாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆன்மீக பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

Exit mobile version