திமுகவின் இடப்பிரச்சனை இராமதாஸ் மூலம் தீர்வு கிடைக்கட்டும்! விசிகவை தொடங்கிய தடா பெரியசாமி அதிரடி

0
150

திமுகவின் இடம் பிரச்சனை இராமதாஸ் மூலம் தீர்வு கிடைக்கட்டும்! விசிக வை தொடங்கிய தடா பெரியசாமி அதிரடி.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கும் கடந்த 3 நாட்களாக டுவிட்டரில் பஞ்சமி நிலம் தொடர்பாக ஒரு போரே நடந்து வருகிறது.

மூன்று நாட்களுக்கு முன்பு அசுரன் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் இது படம் அல்ல பாடம் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ராமதாஸ் அவர்கள் பஞ்சமி நிலம் பற்றிய படம் என்பதால் அவர் பாடமாக எடுத்துக் கொள்வதால் அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள இடம் ஆரம்பத்தில் பஞ்சமி நிலத்திற்கு சொந்தமானது என்பதால் தலித் மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பார் என்று நம்பப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு ஸ்டாலின் அவர்கள் அண்ணா அறிவாலயத்தின் பட்டா சிட்டாவை டிவிட்டரில் ‌வெளியிட்டு தனி நபருக்கு சொந்தமான இடம் எனவும் பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் ராமதாஸும் அன்புமணியும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இப்படி மாறி மாறி இருவரும் கேள்விகளும் கொண்டிருப்பதால் தமிழகத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாகவே மாறிவிட்டது. பஞ்சமி நிலம் பற்றி இது திமுகவினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது,

பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றவர்கள் என்றுமே அலசி ஆராய்ந்துதான் அறிக்கை வெளியிடுவார்கள் என்று ஸ்டாலினுக்கு தெரிந்த விஷயம் தான்.

திருமாவளவன் கடந்த காலத்தில் பேசி இருந்து வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிறுதாவூர் பங்களாவாக இருந்தாலும் அறிவாலயமாக இருந்தாலும் அரசு ஆய்வு செய்து குழு அமைத்து தகுதியான தலித் மக்களுக்கு பிரித்து தர வேண்டும் என்றுர பேசியிருந்தார்.

பஞ்சமி நிலம் மீட்புக்கான இயக்கத்தின் தடா. பெரியசாமி திட்டவட்டமாக அண்ணா அறிவாலயம் பஞ்சமி நிலத்திற்கு சொந்தமானது தான் என்று டிவிட்டரில் தெரிவித்து திமுக வை கதறவிட்டுள்ளார்.

Dr .ராமதாஸ் அவர்கள் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தின் இடம் என்று குறிப்பிட்டது உண்மையே!

ஸ்டாலின் அவர்கள் காட்டும் பட்டா 1985 க்கானது. 1923 நிரந்தர கணக்கு பதிவேடு (Permanent Register ), RSR( Re-settlement Paisal Register ), SLR (Settlement Land Register) மற்றும் 1935 ன் Gazette Copy ஆகியவற்றில் மேற்படி சர்வே எண் பற்றி தெரிந்து கொண்டு ஸ்டாலின் அவர்கள் பேசவேண்டும். முதலில் ஒரு தலித்துக்கு சொந்தமாக இருந்து பிறகு இரண்டு தலித் அல்லாதவர்களுக்கு கை மாற்றப்பட்டு, 4 வதாகத்தான் அஞ்சுகம் பதிப்பகத்திற்கு வாங்கியுள்ளனர்.1985 ஆவணத்தின் மூலத்தை காண்பிப்பேன் என்பது வாய்சவடாலே! Dr. ராமதாஸ்,ஸ்டாலின் ஆகியவர்களுக்கிடையான பிரச்சினையின் வழியாக தலித் மக்களின் பஞ்சமி நில மீட்புக்கு தீர்வு_கிடைக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

தடா. பெரியசாமி அவர்கள் 2010 இல் மண்ணுரிமை மீட்பு இயக்கம் தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலப் பட்டியலைத் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், வாங்கி வெளிக்கொண்டு வந்துள்ளார். இதில் தமிழகம் முழுக்க உள்ள பஞ்சமி நிலத்தைக் கணக்கெடுத்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு தொல். திருமாவளவனுடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடங்கியவர். அதற்கு முன்னர், நக்சல்பாரி அமைப்பில் சேர்ந்து, அரியலூர் மருதையாற்றுப் பாலம் குண்டுவெடிப்பு வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை பெற்று, பின்னர் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்.

இவர் தற்போது பாஜகவில் உள்ளார். அக்கட்சியின் மூத்த தலைவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.