Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரேமலதா வால் தேமுதிகவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

தேமுதிகவை சார்ந்தவர்களுக்கு மத்தியில் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா மீது பெரிய அதிருப்தி இருப்பதாகவும், தேர்தல் முடிவுக்குப்பின் அது பெரிதாகும் எனவும்.தெரிவிக்கப்படுகிறது.சட்டசபை தேர்தலில் கூட்டணி தொடர்பான சரியான முடிவை அந்த கட்சியின் தலைமை எடுக்காத காரணத்தால், பிரேமலதா விஜயகாந்த் மீதும் அந்த கட்சியின் தலைமை மீதும் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்தவுடன் அந்த கட்சியை சார்ந்தவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் அந்த கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிட்டு மாற்றுக் கட்சியில் இணைவதற்கு தயாராகி வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் முதலிடத்தில் இருப்பது வேலூர் மாவட்டம்தான் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்காக தேர்தல் முடிந்தவுடன் விழுப்புரத்தில் ஆலோசனை கூட்டத்தை அவசரமாக நடத்தி முடித்திருக்கிறார். அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இடைத்தேர்தலில் கட்சியின் தலைமை எடுத்த முடிவு எதிர்கால அரசியல் கருத்தை வைத்து வாக்கு எண்ணிக்கை முடிவு வருவதற்குள் இந்த கூட்டத்தை நடத்தி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தேர்தலுக்கு முன்பாகவே ஜனவரி மாதத்திற்குள் இந்த கூட்டணியில் ஒரு நல்ல முடிவு வந்துவிடும் என்ற பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். அதனை நாங்கள் எல்லோரும் நம்பி இருந்தோம் இருந்தாலும் எந்த விதமான நிகழ்வும் நடக்கவில்லை. கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி என்று உறுதியாக இருந்தார். அப்படியே நடந்தும் கொண்டார் என்று தெரிவித்திருக்கிறார்.

அப்படி விஜயகாந்த் உறுதியாக இருந்ததன் விளைவாக நமக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. ஆனால் அதற்குப் பின்னர் கட்சியின் தலைமை சரியான நிலைபாட்டை முன்னெடுக்கவில்லை காங்கிரஸ் சரியான கூட்டணி அமைத்து கட்சிக்கு தலா 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 சட்டசபை உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள். ஆனால் நம்மால் எதுவுமே செய்ய முடியவில்லை.

எல்லாம் சறுக்கலில் போய் முடிந்து விட்டது மூன்றாவது அணி என்பது எப்போதும் முதல் அணியாக மாறுவதற்கான வாய்ப்பு இல்லை. எப்போதும் தமிழ்நாட்டில் இரண்டு அணிகள் தான் என்பதை நடைபெற்ற தேர்தல் நிரூபித்திருக்கிறது இது நமக்குள் ஒரு மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல இனி இந்த கட்சியில் இருந்தால் எதுவும் நடக்காது ஆகவே மாற்றுக் கட்சிக்கு செல்ல நாம் தயார் ஆகி விடலாம் தேர்தலில் கூட்டணி கட்சியில் 50 கோடி வாங்கிக்கொண்டு தலைமை நம்முடைய செலவிற்கு வெறும் மூன்று லட்சம் கொடுத்து அதை திருப்பி கொடுத்து விட்டேன் என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version