Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமருக்கு சேலை, பொட்டு, வளையல், பூ பார்சல்!! நூதனப் போராட்டம்!!

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது மிக மிக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் கிட்டத்தட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் மக்கள் வெளியில் வருவதற்கு பெட்ரோல் செலவு செய்ய வேண்டும் என்று எண்ணி நடந்து வருகிறார்கள்.

இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் உயர்வினைக் கண்டித்து புதுவையில் மகளிர் காங்கிரஸ் சார்பாக நூதனப் போராட்டம் நடந்தது.மேலும், தற்போது சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால், நாடு முழுவது அதனைக் கண்டித்து பல தரப்பினரும் பல விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனை அடுத்து புதுச்சேரியில் மகளிர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக, பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சேலை, பொட்டு, மஞ்சள் மற்றும் வளையல் ஆகியவற்றை அனுப்பி வைத்து நூதனப் போராட்டம் நடைபெற்றது.

மேலும், புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேம் பஞ்ச காந்தி அவர்களின் தலைமையில், கட்சி நிர்வாகிகள் ரங்கப்பிள்ளை வீதியில் ஆம்பூர் சாலையில் உள்ள தபால் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

அதன் பின், அவர்கள் அவர்கள் போராட்டத்திற்கு கொண்டு சென்ற வளையல், பூ, சேலை மற்றும் மஞ்சள், பொட்டு போன்ற பொருட்களை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பார்சல் செய்து அனுப்பி வைத்தனர்.

Exit mobile version