Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடல் நல குறைவால் இறந்த மகன்.. சோகத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு..!

9549 Persons Suicide in Kerala

9549 Persons Suicide in Kerala

மகன் இறந்த துக்கம் தாளாமல் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஆவடி பகுதியில் தனசேகரன் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும் இவர்களுக்கு மவுனிகா, ஹரிஷ் என்ற பிள்ளைகளும் உள்ளனர். மவுனிகாவிற்கு திருமணம் முடிந்த நிலையில் ஹரிஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நல குறைவால் திடீரென உயிரிழந்தார்.

மகனின் இறப்பால் தம்பதிகள் இருவரு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.மகன் இறந்த நாள் முதல் வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் இருந்த அவர்கள் மகனே சென்ற பிறகு நாங்கள் ஏன் உயிருடன் இருக்க வேண்டும் என புலம்பி வந்துள்ளனர்.அவர்களின் உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து வந்துள்ளனர் இந்நிலையில், சம்பவத்திற்கு முன் தினம் அவர்கள் தங்களது மகளுக்கு போன் செய்து அடுத்த மாதம் தம்பிக்கு நினைவு நாள் வரபோவதாக கூறியுள்ளனர்.

அதன்பின்னர், தனசேகரன் தனது தாயாருடன் பேசிகொண்டிருந்தனர்.இதனை அடுத்து, பூங்காவனம் தூங்க சென்றுள்ளார். காலை எழுந்து வந்து பார்த்த போது மகன் மற்றும் மருமகள் வாயில் ரத்தம் வடிந்த நிலையில், இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மகன் இறந்த துக்கத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version