மாணவர்கள் இனி இந்த தவறு செய்தால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தான் தண்டனை! காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!!
சமீப காலமாகவே மாணவர்கள் பேருந்துகளில் தொங்கியபடி செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இவ்வாறு பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதால் மரணமும் ஏற்படுகிறது. பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் நின்று பயணித்தால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனால் சில மாவட்டங்களில் சில பேருந்துகள் குறைந்த அளவிலேயே இருப்பதால், மாணவர்கள் சிலர் கட்டாயத்தினால் அந்த குறிப்பிட்ட பேருந்தில் செல்ல வேண்டி உள்ளது. அவ்வாறு இருக்கையில் மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டுகளில் அபாயகரமாக பயணம் செய்கின்றனர்.
இதனை தடுக்க விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். இனிவரும் நாட்களில் பேருந்தின் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்தால் அதற்கு,அந்த மாணவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்கள் பயணம் செய்ய பேருந்து பற்றாக்குறை குறைபாட்டை ஏற்று அதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறோம். மேலும் மாணவர்களுக்கு, பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம். இவ்வாறு இருக்கையில் இனி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்தால் அதனின் முழு பொறுப்பு அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே என கூறியுள்ளனர்.