Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளிகள் திறந்தாலும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராக இல்லை என பெற்றோர்கள் தரப்பில் தகவல்

இந்தியாவின் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகு பள்ளிகளை திறக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதை தொடர்ந்து தனியார் பள்ளி தனியார் நிறுவனம் சார்பில் பெற்றோர்களிடம் பள்ளிகளை திறக்கலாமா ? என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் 62% பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்தனர்.23 சதவீதம் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்றும் மீதமுள்ள 15% பெற்றோர்கள் எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் விட்டனர் என்று கருத்துக் கூறியுள்ளனர்.

இதேபோன்ற அண்மையில் லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் செப்டம்பர் 1- ஆம் தேதி திறக்கப்படாலும் அடுத்த 60 நாட்கள் மக்கள் மல்டிபிளக்ஸ் மற்றும் தியேட்டருக்கு செல்வோம் என 6 சதவித மக்கள் கருத்து தெரிவித்தனர் .அடுத்த 60 நாட்களில் மெட்ரோ மற்றும் உள்ளூர் ரயில்களில் பயணம் செய்வோம் என 36 சதவீதம் மக்கள் கூறியுள்ளனர்.

பெரும்பாலான பெற்றோர் டிசம்பர் 31ம் தேதி தேதிக்கு பின்னரே பள்ளிகள் திறப்பது பற்றி அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் அதற்கு முன் முடிவெடுக்கக் கூடாது என்று விரும்புகின்றனர் .இதற்கு பதிலாக ஆன்லைன் கல்வி, தொலைக்காட்சி ,வானொலி உள்ளிட்ட வழிகளில் கல்வி கற்க அரசு முயற்சி செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்தனர்.

Exit mobile version