பெற்றோர்களே உஷார்! இந்த சிரப்பை சாப்பிட்ட 66 குழந்தைகள் உயிரிழப்பு!

0
291
Parents beware! 66 children who ate this syrup died!

பெற்றோர்களே உஷார்! இந்த சிரப்பை சாப்பிட்ட 66 குழந்தைகள் உயிரிழப்பு!

உலக சுகாதார அமைப்பு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் ஹரியாணாவின் சோனிபட்டை சேர்ந்த மெய்டென் மருந்தியல் நிறுவனம் தயாரித்த மருந்துகளில் நச்சு மற்றும் இறப்புக்கு காரணமான ரசாயனங்கள் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.புரோமெத்தசைன் வாய்வழி மருந்து ,கோபெக்ஸ்மாலின் பேபி இருமல் சிரப் ,மகாப் பேபி சிரப் ,மேக்ரிப் என் இருமல் சிரப் ஆகிய நான்கு மருந்துகளும் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என உலக சுகாதார அமைப்பு மருந்து பொருள்கள் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.அதற்கு இந்தியாவில் தாயரிக்கப்பட்ட நான்கு இரும்பல் சிரப்கள்தான் காரணம் என கூறப்படுகின்றது.இந்த நச்சுத்தன்மை கொண்ட மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாட்டிற்கும் வெளியிலும் சென்றிருக்கலாம் என சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த மருந்துகள் தொடர்பான பொருள்களின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவுகளில் டை எத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது.இந்த இரண்டு வேதியியல் பொருள்களை மனிதர்கள் பயன்படுத்தும் போது உயிரிழப்புக்கு காரணமாகும் என அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.