பெற்றோர்களே உஷார்!! நீரால் பரவி குழந்தைகளின் மூளையைத் தாக்கி உயிரை பறிக்கும் புதிய வகை நோய்!! 

0
96
Parents beware!! A new type of disease that eats children's brains!!

பெற்றோர்களே உஷார்!! நீரால் பரவி குழந்தைகளின் மூளையைத் தாக்கி உயிரை பறிக்கும் புதிய வகை நோய்!! 

தற்போது குழந்தைகளின் மூளையை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய வகை அமீபா நோயால் 2 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

தற்போது உள்ள காலகட்டத்தில் வைரஸ்,பாக்டீரியா உள்ளிட்ட நுண்கிருமிகளால் ஏராளமான நோய்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்பட்டு வருகின்றன.  இவற்றில் சிலவற்றிற்கு மருந்துகள் கண்டுபிடிக்க பட்டுள்ளன. சில நோய்கள் காலபோக்கில் அவைகளே அழிந்து போவது உண்டு.

அதைப்போல கடந்த சில வருடங்களாக கொரோனா வைரஸ் மக்கள் அனைவரயும் பாடாய் படுத்தி வந்தது. இதில் உலகம் முழுவதிலும், ஏராளமான மக்கள்  பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டு அதன் தீவிரம் குறைக்கப்பட்டு உள்ள போதும் அதன் தாக்கம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் புதிய வகை குழந்தைகளின் மூளையை தின்னும் அமீபா நோய் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மூளையை தாக்கி உண்ணும் Naegleria fowleri எனும் அமீபாவால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

அமெரிக்காவில் உள்ள நெவாடாவில்  2 வயது சிறுவன் ஒருவன் மூளையை உண்ணும் அரிய வகை அமீபா வால்  பாதிக்கப்பட்டிருந்தான். இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட   குழந்தை கடந்த ஜூலை 19-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

உயிரிழந்த குழந்தையின் தாய் பிரியானா,2 நாட்களுக்கு முன் தன் பேஸ்புக் பதிவில், உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது குழந்தையை நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைத்துச் சென்றபோது இனி காப்பாற்ற முடியாது எனக் கூறி சிகிச்சையளிக்க மறுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து சுகாதார நிறுவனம் முறையான பதில் எதுவும் கூறவில்லை என்று தெரிகிறது.

கடந்த வாரம் குழந்தைக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்ட போது, பெற்றோர் ஆரம்பத்திலேயே  குழந்தைக்கு ஏதோ பிரச்சனை இருப்பதாக உணர்ந்து  குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ ஊழியர்கள் முதலில் குழந்தை மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக நினைத்தனர்.

ஆனால் சோதனையில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பரவலாக ஏராளமானோரை பாதித்த, மூளையை  உண்ணும் கொடிய அமீபா அக்குழந்தையை பாதித்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

Naegleria fowleri என்பது ஒருவகை அரிய அமீபா. இது ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட நன்னீர் நிலைகளில் காணப்படும். இந்த அமீபா இருக்கும் நீர் மூக்கின் வழியாக சென்று மூளையை பாதிக்கலாம் என்பதால் இது மூளையை உண்ணும் அமீபா அழைக்கப்படுகிறது. இது ஆபத்தான, அரிதான நோய் ஆகும்.

Naegleria fowleri வகை அமீபா உள்ள நீர் மூக்கில் நுழையும்போது தொற்று ஏற்படுகிறது. அடுத்ததாக அமீபா வாசனை நரம்பு வழியாக மூளைக்கு செல்கிறது. அசுத்தமான தண்ணீரை குடிப்பதன் மூலம் இந்த நோய்த் தொற்று ஏற்படுவது இல்லை. ஆனல் அந்த அமீபா மூக்கின் வழியாக மூளைக்கு செல்லும்போது இடம் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.