இன்றைய வாழ்க்கை சூழலில் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியமான விஷயமாகும்.தற்பொழுது குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதால் அவர்களை எப்பொழுதும் தங்கள் கண்காணிப்பில் இருக்கும்படி பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.குழந்தைகளுக்கு மன தைரியம் குறைவாக இருப்பதால் தான் அவர்களால் எந்த விஷயங்களை தைரியமாக வெளியில் சொல்ல முடிவதில்லை.சில குழந்தைகள் பெற்றோர் திட்டுவார்கள் என்று பல விஷயங்களை மூடி மறைக்கத் தொடங்குகின்றனர்.இது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்க முக்கிய காரணமாக அமைந்துவிடும்.
குழந்தைகள் சிலர் எந்த விஷயத்தையும் வெளிப்படையாக பேச மாட்டார்கள்.அவர்களுக்கு பிறரிடம் சொல்ல வேண்டுமென்ற எண்ணம் கூட தோன்றாது.இது அவர்களது தவறு இல்லை.வளர்க்கும் பெற்றோரின் தவறு தான் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கிறது.
குழந்தைகளுக்கு அதீத செல்லம் கொடுத்து அவர்கள் விரும்பும் விஷயத்தை யோசிக்காமல் உடனடியாக சில பெற்றோர் செய்கின்றனர்.குழந்தைகளுக்கு அவர்கள் ஆசைப்படுவது எளிதில் கிடைத்துவிடுவது அவர்களுக்கு மைனஸ் தான்.குழந்தைகளை தங்கள் சூழலுக்கு ஏற்றவாறு வளர்க்க வேண்டும்.
சில குழந்தைகள் எந்நேரமும் மொபைல் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.இதனால் அவர்கள் வேறு எந்த செயலிலும் கவனத்தை செலுத்த மாட்டார்கள்.இதன் காரணமாக அவர்களால் மற்றவர்களிடம் எளிதில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் போய்விடும்.குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் வெளிப்படையாக சொல்ல முடியாமல் போகும்.
அதேபோல் சில பெற்றோர் குழந்தைகளின் அதிகம் கடிந்து கொள்வார்கள்.இதனால் குழந்தைகள் அச்சத்தில் பெற்றோரிடம் பல விஷயங்களை மறைப்பார்கள்.இது குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோருக்கும் பிரச்சனையாக மாறிவிடும்.பெற்றோர் தங்கள் குழந்தைகளை பேச வைக்க வேண்டும்.
குழந்தைகள் வெளிப்படையாக பேசும் பொழுது தான் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பெற்றோரால் புரிந்து கொள்ள முடியும்.குழந்தைகளுடன் நடப்பாக இருக்க வேண்டும்.அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும்.அவர்களை நல்வழிப்படுத்தும் விஷ்யங்களையே செய்ய வேண்டும்.குழந்தைகளுக்கு மன தைரியத்தை அளிக்கும் செயல்களை செய்ய வேண்டும்.குழந்தைகள் மீது அக்கறை மற்றும் அவர்கள் நடவடிக்கைகள் மீது கவனத்தை அதிகரிக்க வேண்டியது பெற்றோர் கடமை.