கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தராஜ்(80) இவருடைய மனைவி லட்சுமி (73) இந்த தம்பதியரின் மகன்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், மகள் கீதா இதில் மின்வாரியத்தில் பணியாற்றி வந்த மூத்த மகன் ரவிச்சந்திரனும், திருமணம் ஆன மகள் கீதாவும் உயிரிழந்து விட்டார்கள். ரவிச்சந்திரனின் மனைவி சேலத்தில் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுடைய 2வது மகன் ராஜேந்திரன் பெற்றோருடன் வசித்து வந்தார். பட்டதாரியான இவர் தனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை, திருமணம் நடைபெறவில்லை என்ற ஏக்கம் காரணமாக சற்றே மனநிலை பாதித்த நிலையில் இருந்திருக்கிறார்.
அத்துடன் இவர் அவ்வப்போது பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2 தினங்களாக கோவிந்தராஜ், லட்சுமி உள்ளிட்ட இருவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததுடன் அவர்களுடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் அடித்ததால் இது தொடர்பாக அண்டை வீட்டார்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் மற்றும் பட்டீஸ்வரம் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது கோவிந்தராஜ், லட்சுமி உள்ளிட்ட இருவரும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அங்கே அவர்களுடைய மகன் ராஜேந்திரனும் இருந்திருக்கிறார்.
விசாரணையில் தினங்களுக்கு முன்னர் பெற்றோருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ராஜேந்திரன் அறிவாலால் பெற்றோரை தலையில் வெட்டி கொலை செய்துவிட்டு எதுவும் நடக்காததை போல வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டு கொண்டு இருந்தது தெரிய வந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கோவிந்தராஜ் லட்சுமி உள்ளிட்டோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அத்துடன் இது தொடர்பாக காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட ராஜேந்திரனை கைது செய்து அவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.