Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெற்றோர்களே நினைவுக்கொள்ளுங்கள் ‘மார்ச் 3’போலியோ முகாம்!!

#image_title

பெற்றோர்களே நினைவுக்கொள்ளுங்கள் ‘மார்ச் 3’போலியோ முகாம்!!

தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையான அன்று அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் , அங்கன் வாடி மையங்கள் உள்ளிட்ட 43,051 இடங்களில் முகாம்கள் அமைத்து மொத்தம் 57.84 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நிர்ணயம் செய்துள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் போலியோ முகாம்களால் தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக உள்ளது எனவே இந்த வருடமும் பெற்றோர்கள் தங்களது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தி தங்களது குழந்தைகளை போலியோவில் இருந்து காத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

பெற்றோர்களது வசதிக்காக பேருந்து நிலையம், இரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் முகாம்கள் அமைப்பட உள்ளது குறிப்பிடதக்கது.

Exit mobile version