உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளார்களா? அவர்கள் முன் இதை எல்லாம் செய்யாதீர்கள்..!!

0
207

Parenting in Tamil: குழந்தைகள் தான் எதிர்க்கால சமுதாயத்தின் தூண்களாக பார்க்கப்படுகிறார்கள். இந்தக்காலக்கட்டத்தில் ஒரு குழந்தையை பெற்று அவர்களை வளர்த்து இந்த சமூதாயத்தில் ஆளாக்குவது என்பது பெரும் போராட்டமாக தான் இருக்கிறது. அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள், அதற்கடுத்து தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் மூன்றிலிருந்து நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் என பெற்றெடுத்து ஆளாக்கினார்கள்.

இன்றைய நவீனக்காலத்தில் ஒரு குழந்தையை பெற்று அவர்களை படிக்க வைக்க பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. நாம் படிக்கவில்லை என்றாலும் பராவயில்லை நம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று நினைத்து அவர்களுக்காக கஷ்டப்படும் பெற்றோர்கள் ஏராளம்.

இந்நிலையில் ஒரு குழந்தையை இந்த சமுதாயத்தில் உயரிய மனிதனாக மாற்றுவது என்பது நிச்சயம் பெற்றோர்கள் கையில் தான் உள்ளது. அவர்கள் வளரும் போதே நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுப்பது அவர்களை எதிர்க்காலத்தில் சிறந்த மனிதனாக மாற்றும். பொதுவாக குழந்தைகளுக்கு நல்லது எது? கெட்டது எது? என்பது தெரியாது. வீட்டில் இருக்கும் பெரும்பாலான குழந்தைகள் தன் பெற்றோர்கள் என்ன பேசுகிறார்களோ, மற்றவர்களிடம் எப்படி நடந்துக்கொள்கிறார்களோ அது போல தான் நடந்துக்கொள்வார்கள்.

சில சமயம் நம் வீட்டில் உள்ள குழந்தைகள் பொம்மை டிவி பார்த்து அதில் வரும் கதாபாத்திரங்களை, அவர்களாகவே  நினைத்துக்கொண்டு விளையாடுவார்கள் அல்லவா? அதுபோல தான். அந்த வகையில் நம் குழந்தைகள் முன் செய்யக்கூடாத விஷயங்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

குழந்தைகள் முன் செய்யக்கூடாத விஷயங்கள்

குழந்தைகள் முன் பெரியோர்களை திட்டுவதோ அல்லது அடிக்கவோ கூடாது. இது அவர்களையும் அவ்வாறு செய்ய தூண்டும்.

எப்பொழுதும் உங்கள் குழந்தைகளுடன் மற்று குழந்தைகளை ஒப்பிட்டு பேசி, மற்ற குழந்தைகளை உயர்வாகவும், உங்கள் குழந்தையை தாழ்வாகவும் பேசிவிடாதீர்கள். அது தாழ்வு மனப்பான்மையை அவர்களுக்கு உருவாக்கும்.

குழந்தைகளிடம் விளையாட்டாக கூட பொய் சொல்லக் கூடாது. பொய் சொல்வதை விளையாட்டாக நினைத்து அவர்கள் பொய் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

மேலும் குழந்தைகள் முன் கெட்ட வார்த்தைகள் பேசக் கூடாது. இது அவர்களையும் கோபத்தில் பேச வைக்கும்.

முக்கியமாக குழந்தைகள் முன் பெற்றோர்கள் சண்டைப்போடக் கூடாது. இது குழந்தைகளை மனதளவில் பாதிக்கும்.

வேறு யார் மீதோ உள்ள கோபத்தை உங்கள் குழந்தைகளிடம் காண்பிக்க கூடாது. அவர்கள் மீண்டும் உங்களிடம் பேசுவதற்கு பயப்படலாம்.

குழந்தைகள் உங்களிடம் பேச வரும் பாேது அதனை கவனிக்காமல் அதிகமாக மொபைல் பயன்படுத்தக்கூடாது.

குழந்தைகள் முன் அவர்களது பெற்றோர்கள் நெருக்கமாக இருக்க கூடாது.

எப்பொழுதும் அவர்கள் முன் யாரையும் கேளி, கிண்டல் செய்து நகையாடக் கூடாது.

மேலும் படிக்க: நிம்மதி இல்லையா? உங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால் உடனே தூக்கி எறிங்க..!!