Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடிக்கடி சண்டை போடும் பெற்றோர்!! அவமானத்தால் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி!

#image_title

அடிக்கடி சண்டை போடும் பெற்றோர்!! அவமானத்தால் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி!

குரோம்பேட்டை, நியுகாலனியை சேர்ந்தவர் செல்வம். அவரது மகள் ஜனபிரியா, 19. பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது பெற்றோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலை வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதைபார்த்து ஆத்திரமடைந்த ஜனபிரியா, ‛உங்களால் வெளியே தலை காட்ட முடியவில்லை,அவமானமாக இருக்கிறது எப்போதும் பிரச்னையாகவே இருக்கிறது’ என்று கூறி, வீட்டில் இருந்த இன்ஜின் ஆயிலை எடுத்து, தனக்கு தானே ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

பலத்த காயமடைந்த மாணவியை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, ஜனபிரியா பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Exit mobile version