Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி எடப்பாடி புதிய தகவல்! அண்ணாமலை கருத்து!!

#image_title

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி எடப்பாடி புதிய தகவல்! அண்ணாமலை கருத்து!!

அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் முதன் முறையாக தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வருகை புரிந்தார். சேலம் தலைவாசல் பகுதியில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டடு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

வருகின்ற 2024நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அதிமுக உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கூட்டணி குறித்து முடிவு செய்ய மாநில நிர்வாகிகளுக்கு அதிகாரம் இல்லை, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என கூறியுள்ளார். எனவே தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம் என அவர் கூறினார்.

அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள் தவிர பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் தங்களது தாய் கழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இதனிடையே பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூட்டணி குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி என்பது இன்னும் முடிவாகவில்லை அதே சமயத்தில் உறுதியான மற்றும் இறுதியான கருத்துக்களை இன்னும் யாரும் சொல்லவில்லை, கல்லிலே எழுதி வைத்தது போல உறுதியான வார்த்தைகள் கிடையாது அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது.

அதாவது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒன்பது மாத காலம் உள்ளது, பாஜகவை பொறுத்தவரை இருபத்தைந்து தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு எங்களது வேட்பாளர்களை தயார்படுத்தி வருவதாக அண்ணாமலை கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிப்பது குறித்து பாஜக தேசிய தலைவர்கள் கூறியதை குறிப்பிட்டு பேசிய எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கும் வேறுபாடு உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Exit mobile version