Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முன்னோட்டம்? ஜனவரியில் பாதயாத்திரையை தொடங்குகிறார் அண்ணாமலை!

வெளிநாடு வாழ் பாஜக நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் 70 வருடங்களுக்கு மேலாக வேரூன்றியுள்ள திராவிட கட்சிகளின் கட்டமைப்பை உடைத்து அந்த இடத்திற்கு பாஜகவை கொண்டு வருவது எளிதான காரியமல்ல, ஆனால் மெல்ல, மெல்ல தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது, என்று அண்ணாமலை தெரிவித்தார்.

தற்போது மறுபடியும் மோடி ஆட்சி தான் என்று சாதாரண மக்களும் தெரிவிக்கிறார்கள். ஆகவே தனித்தேன் என்றாலும் பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெறும் இரட்டை இலக்கத்தில் ஓட்டு சதவீதம் இருக்கும் என்றும் தெரிவித்த அண்ணாமலை இதற்காக வரும் ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு முழுவதும் சென்னையில் தங்காமல் தமிழ்நாடு முழுவதும் சென்று கட்சிப் பணிகளில் ஈடுபட உள்ளதாக கூறினார் லோக்சபா தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டு முழுவதும் தீவிரமாக உழைக்க அவர் தன்னை தயார் படுத்திக் கொண்டு வருகிறார் என்றும் அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.

Exit mobile version