Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுத்த மாதம் தொடங்க இருக்கும்நாடாளுமன்ற கூட்டமைப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடத்த நாடாளுமன்ற அதிகாரத்துறை அமைச்சரவைக் குழு கூட்டம் முடிவெடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. அடுத்தடுத்த அனைத்து கூட்டமும், கொரோனா பரவல் காரணமாக நீக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை, வரும் 29 ஆம் தேதி முதல், டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வரை நடத்த நாடாளுமன்ற அதிகரித்துறை அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் சுமார் 20 அமர்வுகளைக் கொண்ட கூட்டத்தொடர் கிறிஸ்துமஸுக்கு முன்னதாக முடிவடையும். மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒரே நேரத்தில் அமர்வுகள் இருந்தாலும் உறுப்பினர்கள் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றி அமருவார்கள்.

குளிர்கால கூட்டத்தொடரில், வளாகம் மற்றும் முக்கிய நாடளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைபவர்கள் எப்போதும் முககவசம் அணிய வேண்டும் என்றும் கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.

2024 பொதுத் தேர்தலுக்கான அரையிறுதியாகக் கருதப்படும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரபிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தொடரில் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அதேசமயம் முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

Exit mobile version