ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சஸ்பெண்டை ரத்து செய்ய நாடாளுமன்ற உரிமை மீறல் விசாரணைக் குழு தீர்மானம்!!
கடந்த ஜூலை 20 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.இதில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.அதன் மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெற்றது.இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நிறைவடைந்தது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10 அன்று மக்களவை காங்கிரஸ் குழு தலைவரும்,எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்ற உரையின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததால் சபாநாயகர் ஓம் பிர்லா அவரை இடைநீக்கம் செய்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக பாஜக உறுப்பினர் சுனில் குமார் சிங் தலைமையிலான உரிமை மீறல் விசாரணைக் குழு நேற்று விசாரணை நடத்தியது.இதில் ஆஜராகிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது கருத்துக்களுக்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.இதையடுத்து
அவரின் இடை நீக்கத்தை ரத்து செய்ய உரிமை மீறல் குழு தீா்மானம் நிறைவேற்றியது.இதனை தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீா்மானம் விரைவில் மக்களவைத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்படும் என்று உரிமை மீறல் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.