Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“அவர் குடும்பத்துல எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்க…” பெருந்தன்மையாக மன்னிப்புக் கேட்ட பார்த்திபன்

“அவர் குடும்பத்துல எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்க…” பெருந்தன்மையாக மன்னிப்புக் கேட்ட பார்த்திபன்

இரவின் நிழல் படம் சம்மந்தமாக ப்ளு சட்ட மாறன் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் மாறி  விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான பார்த்திபன் நடித்த இரவின் நிழல் திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டதற்காக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஆனால் தமிழ் சினிமா பிரபல விமர்சகர் ப்ளு சட்ட மாறன் இந்த படத்தை வழக்கம்போல தன் ஸ்டைலில் காட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.

கோலிவுட் திரை உலகினர் பெரும்பாலானோர்க்கு பிடிக்காத ஒரு நபர் இருக்கிறார் என்றால் அது அனேகமாக புளூசட்டை மாறன் ஆகத்தான் இருக்கும். சிறிய நடிகர்கள் முதல் மாஸ் நடிகர்கள் வரை அனைத்து நடிகர்கள் நடிக்கும் படங்களை எந்தவித வித்தியாசங்கள் எதுவும் இல்லாமல் கழுவி கழுவி ஊற்றி அவர் செய்யும் யுடியூப் விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் படம் பார்க்கிறார்களோ இல்லையோ இவரின் காட்டமான விமர்சனங்களுக்காக வாரவாரம் இவரது வீடியோவை பார்க்கும் லட்சக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்திஅ மாறன் விமர்சனம் செய்தார். அதுபோலவே அந்த திரைப்படம் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் இல்லை எனவும், பார்த்திபன் தவறாக ப்ரமோட் செய்கிறார் என்றும் குற்றச்சாட்டை வைத்தார்.

இந்நிலையில் பார்த்திபன் ரசிகர்கள் என்ற போர்வையில் சிலர் மாறவின் கொடும்பாவியை செருப்பால் அடித்தும், எரித்தும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். இந்நிலையில் இதுபற்றி அறிந்த பார்த்திபன் அந்த செயலுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். அதில் “எனக்கு கொடும்பாவில் எரிப்பில் நம்பிக்கை இல்லை. இதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள். அவர் குடும்பத்தினரிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version