Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தளபதியை ‘ஒத்த செருப்பு’ என கிண்டல் அடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்!

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் முன்னணி நடிகர்களுள் ஒருவர் இளைய தளபதி விஜய். இவருடைய படங்கள் எல்லாம் செம ஹிட் கொடுப்பது வழக்கம்.

அந்த வகையில் இவருக்கென்று ஒரு  ரசிகர்கள் பட்டாளத்தை திரட்டியுள்ளார்  தளபதி. சில நாட்களுக்கு முன்பு பிரபல பாடகர் எஸ்பிபி மறைவுக்கு சென்று வந்த விஜயை பற்றிய வதந்திகள் சமூக வலைதளங்களில் ஹாட் நியூஸ் ஆக பரவி வருகிறது.

இந்த சூழலில் விஜய் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது ஒற்றை செருப்பை ஒன்றை கையில் எடுத்ததில் மூலம்  நெட்டிசன்கள் “ஒத்த செருப்பு” என்று  விஜயை கிண்டலடித்து வந்தனர்.

அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பார்த்திபன் ஒரு நேர்காணலில் காரசாரமாக விவாதித்துள்ளார். அதில் ” ஒரு மனுஷன் துக்க நிகழ்வில் கலந்து கொள்வது கூட தப்பா?

எப்பயோ அரசியலுக்கு வரதுக்கு இப்பவே ஒருவர் டிராமா பண்ணுவாரா? அதனால அவருக்கு என்ன லாபம் கிடைத்துவிடும்?

சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்த எஸ்பிபி-ஐ நேரில் சென்று அஞ்சலி செலுத்தியவரை, சமூக வலை தளங்களில் இப்படி எல்லாம் கிண்டலடிப்பது சரிதானா? என்று ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலித்து உள்ளார் பார்த்திபன்.

இவருடைய பேட்டிக்கு பிறகு விஜய் ரசிகர்கள் மேலும் கொந்தளித்து சமூக வலைதளங்களில் தங்கள் கமெண்ட்டுகளை தெறிக்க விடுகின்றனர்.

 

Exit mobile version