Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற ஊழியர்கள்!

#image_title

நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற ஊழியர்கள்!

புதுச்சேரியில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற பாசிக் ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரியில் இயங்கி வரும் அரசு சார்பு நிறுவனமாக பாசிக்கில் 500க்கும் மேற்பட்டோர் நிரந்தரம் மற்றும் தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 113 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து ஊழியர்கள் கடந்த 1 மாத காலமாக பணிகளை புறக்கணித்து பாசிக் அலுவலகம் வாயிலில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காமராஜர் சாலையில் உள்ள பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக சட்டமன்றத்தை முற்றுகையிட வந்தனர். அப்போது சட்டமன்றம் அருகே அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். அதனை மீறி ஊழியர்கள் செல்ல முயன்றதால் ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி ஆம்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர.

Exit mobile version