Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை! இந்தியாவில் நீளும் விமான சேவைக்கான தடை!!

Passengers banned from international flights! Prolonged ban on flights in India !!

Passengers banned from international flights! Prolonged ban on flights in India !!

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை! இந்தியாவில் நீளும் விமான சேவைக்கான தடை!!

தற்போது தீவிரமாக  பரவி வரும் கொரோனா வைரஸ்-ன் 2 ஆம்,  3 ஆம் மற்றும் 4 ஆம் அலையின் காரணமாக இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் சர்வதேச விமானங்களுக்கு தடை விதித்துள்ளது மற்றும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் விமான சேவைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.  டி.ஜி.சி.ஏ இயங்கு நகரம் திட்டமிடப்பட்டபடி சர்வதேச பயணிகள் போக்குவரத்துக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் தடை நீளும் என அறிவித்துள்ளது.

இருப்பினும் சில சர்வதேச பயணிகள் விமான வழித்தடங்களுக்கு சிவில் ஏவியேஷன் அனுமதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் பயணிகள் விமான வழிதடங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதில் சர்வதேச சரக்கு விமான வழித்தடங்கள் அடங்காது எனவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் நிலைமைக்கு ஏற்றார்போல சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தியா சர்வதேச விமானங்களுக்கு பல முறைகள் தடை விதித்தும் இடைநீக்கம் செய்தும் வந்தது. இம்முறையும் அவ்வாறே பல சர்வதேச பயணிகள் விமானங்கள் தடை ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் நீடிக்கப் பட்டுள்ளது.

Exit mobile version