ஊட்டி கொடைக்கானல் செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. வந்தது புதிய உத்தரவு!!
தமிழ்நாட்டில் மே மாதத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கும்.அதனால் மக்கள் பலர் சுற்றலா தளங்களுக்கு சென்று கோடையை மறந்து,குழந்தைகளுடன் தங்கி பல்வேறு இடங்களை சுற்றி பார்ப்பார்கள்.அந்தவவையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் திண்டுகல்லில் அமைந்துள்ள கொடைக்கானல் மிகவும் புகழ் பெற்ற சுற்றலா தளங்கள் ஆகும்.
ஒவ்வாரு வருடமும் மே மாத சீசன்களில் இங்கு வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை மற்ற நாட்களில் இருப்பதை விட கூடுதலாக இருக்கும்.இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கும்.இதனை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதி மன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது.அதாவது மே 7-லிருந்து ஜூன் 30ம் தேதி வரை ஊட்டி,கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் அனைத்து பயணிகளின் வாகனங்களும் இ பாஸ்(E-PASS)வாங்கி தான் செல்ல வேண்டும் என அறிவித்து இருந்தது.
மேலும் இ பாஸ் பெறுவதற்கு epass.tnega.org என்ற இணையதள முகவரியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மக்களுக்கு கொரோனா காலத்தில் இருந்த மாதிரி, அதிகப்படியான கட்டுப்பாடுகள் இருக்காது என மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் தரப்பட்டது.இந்தநிலையில் தான் அதற்கான காலக்கெடு ஜூன் 30 தேதியுடன் முடிவடைந்து விட்டது.
ஆனால் தற்போது அந்த தேதியை செப்டம்பர் 30ம் தேதி நீட்டிக்கப்படுவதாக சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.மேலும் சென்னை ஐ.ஐ.டி,பெங்களூரு ஐ.ஐ.எம் போன்ற நிறுவனங்கள் அங்கு எத்தனை எண்ணிக்கையிலான வாகனங்கள் செல்லலாம் என்பதை அறிக்கையாக தயார் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.