பயணிகள் அதிர்ச்சி! தேசிய இரயில்வே வெளியிட்ட அறிக்கை! இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை தடை!
கொரோனா தொற்று காரணமாக இந்திய இரயில்வே போக்குவரத்து தடை செய்யப்பட்டு பின் கொஞ்சம் கொஞ்சமாக தடைத் தளர்த்தப்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் இரயில்கள் இயங்கி வரும் நிலையில் இந்திய இரயில்வே போக்குவரத்து ஆணையம் தடை ஒன்றை விதித்துள்ளது. தொற்றின் காரணமாக அனைத்து இரயில் சேவைகளும் நிறுத்தப்பட நிலையில் தற்போது தடைகள் விளக்கப்படிருந்தலும் அனைத்து இரயில்களும் இயக்கப்படாமல் தான் உள்ளது.
எனினும் அனைத்து இடங்களுக்கும் இரயில் போக்குவரத்து நடைபெறுகிறது என்பதுதான் திருப்தி அளிக்கும் விஷயம் ஆகும். இந்நிலையில் இரயிவே போக்குவரத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து டேராடூன் நோக்கி சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து மின் அழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் கூறப்படுகிறது. பயணிகள் செல்போன்களையும், லேப்டாப்களையும் சார்ஜ் போட்டு விட்டுவதே காரணமாக கூறப்படுகிறது. இதனால் இந்திய இரயில்வே ஆணையம் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பயணிகள்கள் சார்ஜர் பாய்ண்ட் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.