வெளிநாடு செல்ல இனிமேல் பாஸ்போர்ட் வேண்டாம்..ஆதார் அட்டை மட்டும் போதும் !

0
196

ஒருமுறையாவது வெளிநாடு சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் உள்ளது, ஆனால் வெளிநாடு என்று சொன்னதுமே முதலில் நமக்கு நியாபகத்திற்கு வருவது பாஸ்போர்ட் மற்றும் விசா தான். பாஸ்போர்ட் இருந்தால் தான் நம்மால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியும். ஆனால் எல்லா நாடுகளுக்கும் பாஸ்போர்ட் வேண்டியதில்லை.

பாஸ்போர்ட் இல்லாமல் நாம் சுற்றி பார்க்க சில நாடுகள் உள்ளது, ஆதார் அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு பயணிக்க சில நாடுகள் உங்களை அனுமதிக்கிறது. 15 வயதுக்கு குறைவாகவும், 65 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருந்தால் நீங்கள் உங்களது ஆதார் அட்டையை மட்டும் வைத்து பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சென்று வரலாம்.

பூட்டானுக்குச் செல்ல விரும்பும் இந்தியப் பயணிகள் 6 மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி நீங்கள் பாஸ்போர்ட் வைத்திருக்கவில்லையென்றால் வாக்காளர் அடையாள அட்டை எடுத்து செல்லலாம் மற்றும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி அடையாள அட்டையை எடுத்துச் செல்லலாம்.

நேபாளத்திற்கு செல்ல விரும்பும் இந்திய பயணிகள் அவசியம் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை கிடையாது. நீங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்கும் விதமான ஏதேனும் ஒரு ஆதாரத்தை மட்டும் கொண்டு சென்றால் போதும்.

இதற்காக நீங்கள் உங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கலாம். பூட்டான் மற்றும் நேபாளம் தவிர சில நாடுகளில் பாஸ்போர்ட் தேவை ஆனால் விசா தேவையில்லை. மாலத்தீவு, மொரிஷியஸ், இலங்கை, தாய்லாந்து, மக்காவ், பூட்டான், கம்போடியா, நேபாளம், கென்யா, மியான்மர், கத்தார், உகாண்டா, ஈரான், சீஷெல்ஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு நீங்கள் விசா இல்லாமலேயே பயணம் செய்யலாம்.