Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோ பேக் ஸ்டாலின்! பசும்பொன் கிராமத்தில் பரபரப்பு!

தேவர் ஜெயந்தியை கொண்டாடுவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ட்விட்டர் வலைதளத்தில் கோபேக் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகின்றது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை ஆகியவை இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவதற்காக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக ஸ்டாலின் அவர்களும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று இருக்கிறார்கள். இந்த நிலையில் கோபேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் பிரபலமடைந்து வருகின்றது.

இந்தியாவிற்கும் இந்துக்களுக்கும் எதிரான தீய சக்தி என்று திமுகவிற்கு எதிராக மக்களின் குரல் ஒலித்த வண்ணம் இருக்கின்றது. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் உயிர் மூச்சாக நினைத்த தெய்வீகம் தேசியம் ஆகிய இரண்டையும் அசிங்கப்படுத்திய நீங்கள் பசும்பொன் மண்ணைக் கூட தங்களுக்கு மிதிக்க அனுமதி இல்லை தேசியம் தெய்வீகம் ஆகிய இரண்டைப் பற்றியும் பேசிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களின் பூமியில் , உங்களுக்கு வேலை என்ன என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

தெய்வம் எங்கே இருக்கிறது என்ற நாத்திகவாதிகள் உடலில் உயிர் எங்கே இருக்கிறது என்ற கேள்வியையே பதிலாக கொடுத்தவர் தெய்வத் திருமகன் தேவர் ஐயா அவர்கள் அந்தப் புனிதமான மண்ணை அசிங்கப்படுத்த முயற்சிக்கும் ஸ்டாலின் இந்துக்களின் திருமணங்களை அவதூறாக பேசி கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்த ஸ்டாலின் என எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

பசும்பொன் ஆன்மீகச் செம்மல் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் புனித பூமிக்கு செல்லாதே தென் தமிழகம் இந்து மக்களின் தலைநகரம் சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக பெரும்பான்மை ஹிந்துக்களை அசிங்கப்படுத்தும் நாத்திகவாதி ஸ்டாலின் தமிழக பெண்கள் விபச்சாரிகள் என திருமாவளவனை பேசச் சொல்லி பெண்களை அவமானப்படுத்திய, ஸ்டாலின் இங்கே வருவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

மோடி அவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும் நேரமெல்லாம் அவருக்கு எதிராக கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தும் திமுக கூட்டணியை இப்போது தமிழகத்துக்கு உள்ளேயே கோபேக் ஸ்டாலின் என்ற ஹாஷ் டேக் ட்ரெண்ட்டாகி வருவதால் அதிர்ச்சி அடைந்து வருகின்றது அறிவாலய வட்டாரம்.

Exit mobile version