Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திரையுலகில் வசூல் வேட்டை நடத்திய பதான்! ஒரே நாளில் இவ்வளவா! 

திரையுலகில் வசூல் வேட்டை நடத்திய பதான்! ஒரே நாளில் இவ்வளவா!  

இந்தி நடிகர் ஷாருக்கானின் பதான் படம் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கி ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன், மற்றும் சிறப்புத் தோற்றத்தில் சல்மான்கான்  நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் ஆக்சன் கலந்த திரைப்படம் தான் பதான்.

படத்தின் கதை இதுதான் இந்தியாவின் மீது அதிரடி தாக்குதல் நடத்த தீவிரவாதியான ஜிம் (ஜான் ஆபிரகாம்) முனைகிறார். அதை உளவு அமைப்பு அதிகாரியான சாருக் கான் எவ்வாறு முறியடிக்கிறார் என்பதை ஆக்சன் நகைச்சுவை சஸ்பென்ஸ் திரில்லிங் கொண்டு படம் நகர்கிறது. மற்றொரு  உளவு பிரிவு அதிகாரியாக டைகர் என்ற வேடத்தில் சல்மான்கான் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.

இதில் ஷாருக்கான் தீபிகாவின் கெமிஸ்ட்ரி சிறப்பான முறையில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஜான் ஆபிரகாமின் அதிரடி நடிப்பு, சல்மானின் சிறப்பு தோற்றம் என படம் முழுக்க ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஷாருக்கானின் நடிப்பில் கடைசி படம் 2018 ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது அதன் பிறகு நான்காண்டுகள் கழித்து பல்வேறு தடைகளுக்கு பின் பதான் படம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் பெரிய நகரங்களான டெல்லி மற்றும் மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரைப்படம் வெளியிடப்பட்டது.உலகம் எங்கும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 2500 தியேட்டர்களுக்கு மேல் வெளியிடப்பட்டது.  இதில் புதிய சாதனையாக படத்தின் வெற்றியால் கூடுதலாக 300 தியேட்டர்களில் படம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் 8,500 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் பதன் படம் வெளியிடப்பட்டுள்ளது. என்று வர்த்தக நிபுணரான தரன் ஆதர்ஷ் தகவல் தெரிவித்துள்ளார்.  இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது.

பாடல்களுடன்  கதை நகர்வும் சீட்டின் நுனியில் ரசிகர்களை அமர வைப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளன. மேலும் ஒவ்வொரு திருப்பங்களும் நன்றாக இருக்கின்றன.  எனவும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்தி திரையுலகில் இதுவரை இல்லாத அளவு திரையிடப்பட்டு ஒரே நாளில் ரூ 55 கோடி வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது பதான் படம். முதன் முதலில் தொடக்க நாளில் இவ்வளவு வசூல் சாதனையை நிகழ்த்தியது இந்த படம் தான். தீபிகா படுகோன் ஜான் ஆபிரகாம் வாழ்க்கையிலும் அதிக வசூல் செய்த படமாக இது அமைந்துள்ளது. டப்பிங் செய்த இடங்களில் இரண்டு கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் விடுமுறை அல்லாத நாளில் வந்து ஒரே நாளில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற பெருமையையும் அதிக இடங்களில் அதிக இந்தி திரையரங்குகளில் வெளியிடப்பட்ட ஒரே திரைப்படம் என்ற பெருமையையும் பதான் திரைப்படம் பெற்றுள்ளது.

 

Exit mobile version