Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இளைஞரின் அவசர முடிவால் ஆயுள் முடிந்தது! பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி! நடந்தது என்ன.??

இளைஞரின் அவசர முடிவால் ஆயுள் முடிந்தது! பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி! நடந்தது என்ன.??

கொரோனா பயத்தில் தான் இறந்துவிடுவோம் என்று நினைத்து தற்கொலை செய்துகொண்ட நபருக்கு, கொரோனா இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாலாசூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தின் மூலம் டெல்லிக்கு வந்தார். அப்போது டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் எல்லோருக்கும் சோதனை செய்வது போல அந்த இளைஞருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் இளைஞருக்கு கொரோனா அறிகுறி இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனக்கு கொரோனா இருப்பதை நினைத்து மன உளைச்சலாகி இறந்து விடுவோம் என்று பயந்து போன இளைஞர், மருத்துவமனையின் 7 வது மாடிக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டார்.

இந்த தற்கொலை சம்பவத்திற்கு அதிகாரிகளே காரணம் என்று இளைஞரின் குடும்பத்தினர் ஆதங்கத்துடன் கூறினர். இதனையடுத்து அவரது உடலில் மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை என்று உறுதியானது. இளைஞரின் அவசர முடிவால் அவரது ஆயுளே முடிந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version