Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வால்மீகிபுரம் ராமர்! பட்டாபிஷேக விழா!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு இருக்கின்ற செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்திருப்பதாவது சித்தூர் மாவட்டம் வால்மீகிபுரத்தில் உள்ள பட்டாபி ராமசாமி கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா 2 நாட்கள் நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு நேற்றைய தினம் மாலை 6 மணி அளவில் கோவில் உள்ளே பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் அங்குரார்ப்பணம் சேனாதிபதி உற்சவம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு ஸ்னாபன திருமஞ்சன யாக சாலையில் ஹோம பூஜை நடைபெற இருக்கிறது. மாலை ஊஞ்சல் சேவை சீதாராமர் சன்னதியில் திருக்கல்யாண உற்சவம் போன்றவை நடைபெறவிருக்கிறது. இரவு அனுமந்த வாகனத்தில் உற்சவர் பட்டாபிராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் உள்ளே உலா வர இருக்கின்றார்.

இதனையடுத்து நாளை காலை மூலவர் மற்றும் உற்சவ இருக்கு நானே திருமஞ்சனம் யாகசாலையில் ஹோம பூஜை இரவு ராமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி, ஊஞ்சல் சேவை, கருட சேவை, உள்ளிட்டவை நடைபெற இருக்கிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Exit mobile version