Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோயில் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் – போலீசார் விசாரணை

Visaranai

Visaranai

கோயில் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் – போலீசார் விசாரணை

பட்டுக்கோட்டை அருகே படப்பைக்காடு கிராமத்தில் உள்ள பெரமையா கோயில் சாமி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள படப்பைக்காடு கிராமத்தில் உள்ள பெரமையா கோயில் சாமி சிலையை நேற்று இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தி சென்றதாக. பாஜக, இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத் உள்ளிட்ட அமைப்பினர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதை எடுத்து அங்கு சென்று அந்த அமைப்பினர்கள் பார்வையிட்ட போது பெரமையா சாமி சிலையின் கைப்பகுதி உடைக்கப்பட்டு இருந்தது . மேலும் சிலையின் உடைக்கப்பட்ட கைப்பகுதி அந்த இடத்தில் இல்லை .

இதனையடுத்து பாஜக ,விசுவ இந்து பரிசத், இந்து முன்னணி அமைப்பினர் இது பற்றி மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் மதுக்கூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் தடைய அறிவியல் வல்லுநர்கள் இன்று சேதப்படுத்தப்பட்ட சாமி சிலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் சாமி சிலையை சேதப்படுத்தியவர்கள் யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .சாமி சிலை சேதப்படுத்தப்பட்ட இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version