நரம்பு தளர்ச்சிக்கு நிரந்தர தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!
உடல் இயங்க உடலில் உள்ள நரம்பு வலுவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நரம்பு தளர்ச்சி, நரம்பியல் குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம், ஆண்மை குறைபாடு, மது அருந்துதல் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படும் நரம்பு தளர்ச்சியை கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்வது நல்லது.
தீர்வு 01:-
*ஜாதிக்காய்
*இலவங்கம்
இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்து உரலில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
தீர்வு 02:-
*மஞ்சள் தூள்
*வெந்தயத் தூள்
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து இந்த 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி வெந்தயத் தூள் மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு குடிக்கவும்.
தீர்வு 03:-
*பூனைக்காலி பொடி
*ஓரிதழ் தாமரை பொடி
இந்த இரண்டு பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி அரைத்து வைத்து பயன்படுத்தவும்.
ஒரு கிளாஸ் அளவு சூடான நீரில் இந்த இரண்டு பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி முழுமையாக குணமாகும்.