Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பவன் கல்யாண் 1400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்!!! ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!!!

#image_title

பவன் கல்யாண் 1400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்!!! ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!!!

பவன் கல்யாண் அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியிடம் இருந்து 1400 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு செயல்படுகிறார் என்று ஒய்.ஒஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ துவரம்புடி சந்திரசேகர ரெட்டி அவர்கள் பவன் கல்யாணம் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

ஒய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்த துவரம்புடி சந்திர சேகர ரெட்டி அவர்கள் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவின் எம்.எல்.ஏவாக இருக்கிறார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ துவரம்புடி சந்திரசேகர ரெட்டி அவர்கள் நேற்று(அக்டோபர்7) கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது எம்.எல்.ஏ துவரம்புடி சந்திரசேகர ரெட்டி அவர்கள் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியிடம் 1400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார் என்றும் மீண்டும் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துவரம்புடி சந்திரசேகர ரெட்டி அவர்கள் “ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கு தெலுங்கு தேசம் கட்சியிடம் இருந்து 1400 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியிடம் இருந்து பெற்ற 1400 கோடி ரூபாயை பவன் கல்யாண் அவர்கள் சிங்கப்பூர், துபாய், ரஷ்யா ஆகிய ஆகிய நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்துவிட்டார். இந்த விவரங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் இருக்கின்றது.

இதன் காரணமாக தான் பவன் கல்யாண் அவர்கள் தெலுங்கு தேசம் கட்சி பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெறும் என்று கூறி வருகின்றார். ஆனால் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைக்குமா என்பது சந்தேகம் தான்.

இது மட்டும் நிச்சயம். தேர்தலில் மீண்டும் 2வது முறையாக ஒய்.ஒஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் முதலமைச்சராக பதவியேற்பார். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version