கூகுள் பே மூலம் பணம்! டோர் டெலிவரியில் கஞ்சா! கையும் களவுமாக சிக்கிய விநியோகிப்பாளர்கள் !
நாளுக்கு நாள் மக்களுக்கு கஞ்சா மேல் மோகம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலங்கள் சுலபமாகவே கிடைக்க ஆரம்பித்து விட்டது. இதனால் அவர்களின் தினசரி வாழ்க்கை முறை பெரிதும் பாதிப்படைகிறது. இவ்வாறு இருக்கையில் தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் வேண்டாம் போதை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் முற்றிலுமாக போதை ஒழிப்பு கொண்டு வர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். இவர் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். இதர மாவட்டங்களில் அந்தந்த பாமக மாவட்ட தலைவர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தற்பொழுது மாணவர்கள் அதிகப்படியானோர் இந்த போதைக்கு அடிமையாகி உள்ளதாக தெரிவித்தார். தற்பொழுது நடைபெற்ற கணக்கெடுப்பில் 10 விகிதத்தில் இருந்து 11 விகிதமாக அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
இதனையெல்லாம் தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அது மட்டுமின்றி சில மாதங்களுக்கு முன்பு நாகை மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவது அம்பலமானது. போலீசாருக்கு கிடைத்த தகவல்களின் பெயரில் தீவிரமாக ஆய்வு செய்து 5 கோடி மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது. இன்று பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மதுவிலக்கு போலீசார் மற்றும் பெரம்பூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அந்நேரத்தில் சந்தேகம் படும்படி இரண்டு பேர் இருந்ததால் அவர்களை விசாரணை செய்தனர். அந்த இருவரும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் சோதனை செய்ததில் 20 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேற்கொண்டு அவர்களை விசாரணை செய்யும் பொழுது, சென்னை அம்பத்தூர் பகுதி சேர்ந்த அர்ஜுன் என்பவர் இவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் கூகுள் பேய் மூலம் பணம் அனுப்பியுள்ளார். அந்த கூகுள் பே மூலம் பணம் அனுப்பியஅர்ஜுன் என்பவர் தான் இவர்களை ஒரிசாவில் இருந்து கஞ்சாவை எடுத்து வர சொன்னதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இவர்கள் வாக்குமூலம் கொடுத்ததையடுத்து அர்ஜுன் தாசையும் போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர். மேற்கொண்டு அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இவர் மூலம் வேறு எந்தெந்த இடத்திற்கு கஞ்சா பொட்டலங்கள் அனுப்பப்பட்டுள்ளது என்பது மேற்கொண்ட விசாரணை மூலம் தெரிய வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.