கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பேடிஎம் செயலி !!

0
103

கூகுள் நிறுவனமானது ஆன்லைன் சூதாட்ட விதிகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் விளையாட்டு பந்தயத்தை எளிதாக்கும் எந்த ஒரு கட்டுப்பாடு கட்டுப்பாடற்ற சூதாட்டங்களை பயன்பாடுகளை ஆதரிக்க மாட்டோம் என்று கூகுள் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனமானது ,எந்த ஒரு சூதாட்ட பயன்பாட்டிற்கும் ஒப்புதல் அளிக்காது என்றும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.ஆனால், பேடிஎம் எந்த ஒரு விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை கூகுள் நிறுவனம் முன்வைத்துள்ளது.

கூகுள் நிறுவனமானது, இன்று இந்தியாவில் விளையாட்டு சூதாட்ட கொள்கைகள் என்ற தலைப்பில் ஒரு வலைதள பதிவை வெளியிட்டு இருந்தது.அதில் இந்தியாவில் சூதாட்டத்தை ஆதரிக்கும் அல்லது ஊக்குவிக்கும் எந்த ஒரு பயன்பாடு தொடர்பான சிக்கல்களை இது எடுத்துக்காட்டியது.

மேலும், கூகுள் பிளே ஸ்டோர் நுகர்பொருள் பாதுகாப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . அதே நேரத்தில் டெவலப்பர்கள் நிலையான வணிகங்களை உருவாக்க தேவையான தளத்தையும் கருவியையும் கூகுள் நிறுவனமானது வழங்குகிறது .உலகளவில் கூகுளின் கொள்கை எப்போதுமே தனது இலக்கை மனதில் கருத்தில் கொண்ட அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பங்குதாரர்கள் நன்மைகளையும் கருத்தில் கொண்டு கூகுள் தனது வலைப்பதிவில் வலிமைப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.

இதனால், ஆன்லைன் சூதாட்ட விதிகளை அனுமதிக்கமாட்டோம் என்றும், விளையாட்டு பந்தயங்களை பெரிதாக்கும், எந்த ஒரு கட்டுப்பாடற்ற சூதாட்ட பயன்பாடுகளையும் ஆதரிக்க மாட்டோம் என்று நுகர்பொருள் வெளிப்புற வலை தளத்திற்கு கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. உண்மையான பணம் அல்லது பணப் பரிசுகள் வெள்ள கட்டணம் போட்டிகளில் பங்கேற்ற அனுமதிப்பது, கூகுள் நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதாக இருப்பதனால் கூகுள் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கருத்தில் கொண்டு நீக்கப்பட்டதாக துணைத்தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.