இதற்கு மத்திய அரசுதான் காரணம்! பாஜக மீது காங்கிரஸ் கடும் தாக்கு!

0
109

நோய்த்தொற்று பரவலின் மூன்றாவது அறை ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்து கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இருந்தாலும் தமிழ்நாட்டில் பல இடங்களில் நோய்த்தொற்று தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் தற்சமயம் தடுப்பூசி இல்லை என்பது தான் உண்மை என்று நேற்றையதினம் தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், பா சிதம்பரம் தன்னுடைய வலைதள பக்கத்தில் தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் நோய் தடுப்பூசி மருந்து இருப்பு இல்லை என்றும் தடுப்பூசி போடுவது ஜூன் மாதம் இரண்டாம் தேதியிலிருந்து கிட்டத்தட்ட மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசின் தடுப்பூசி தயார் செய்யும் மற்றும் கொள்முதல் கொள்கைகள்தான் தான் இந்த சூழ்நிலைக்கு முழுமையான காரணம். அதோடு தடுப்பூசி பற்றாக்குறையை இல்லை என்று தினந்தோறும் சொல்லிக் கொண்டிருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சில நாட்களாக காணவில்லை என்பதை யாராவது கவனித்தீர்களா என்று குறிப்பிட்டு இருக்கின்றார் பா சிதம்பரம்.