பிரதமர் மோடியாக நடிக்கும் அமைதிப்படை சத்யராஜ்.. சம்பளம் இல்லாமல் ஒப்பந்தமா??

0
181
Peace Corps Satyaraj playing PM Modi.. Contract without salary??

பிரதமர் மோடியாக நடிக்கும் அமைதிப்படை சத்யராஜ்.. சம்பளம் இல்லாமல் ஒப்பந்தமா??

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் சத்யராஜ். இவர் ஆரம்பகட்ட காலத்தில் தனது நடிப்பை வில்லன் கதாபாத்திரம் மூலம் ஆரம்பித்தார். இவரும் இயக்குனர் மணிவண்ணனும் கல்லூரி கால நண்பர்கள் என்பதால் அவர் எடுக்கும் பல படங்களில் இவர்தான் ஹீரோ. அதில் மிகவும் வெற்றியடைந்த அரசியல் சார்ந்த படம் தான் அமைதிப்படை. இதில் தனது நடிப்பை தத்ரூபமாக காட்டிருப்பார். மக்கள் மனதில் சத்யராஜ் அவர்கள் அமாவாசை என்ற பெயரில் மிகப்பெரியளவில் இடம் பிடித்தார்.

இதனையடுத்து இவரின் கட்டப்பா கதாபாத்திரமும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. வில்லன், வீரன் இதனைத் தொடர்ந்து நயன்தாரா மற்றும் லவ் டுடே உள்ளிட்ட படங்களின் ஹீரோயின்களுக்கு அப்பாவாகவும் சாப்ட் கேரக்டரில் கலக்கி வந்தார். தொடர்ந்து இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் இவர் பெயரை சொல்லும்,அந்த அளவிற்கு இவரது நடிப்பு பாராட்ட பெற்றது. அந்த வகையில் சமீபத்தில் விளையாட்டு மற்றும் அரசியலில் வெற்றி வாகை சூடிய வீரர்களின் வாழ்க்கையை படமாக எடுப்பது பேஷனாக உள்ளது.

அதில் எம் எஸ் தோனி, அரசியல் சகாப்தத்தில் ஜெ ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை உள்ளிட்டவர்களின் படம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்பொழுது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளனர். இதில் பிரதமர் மோடியாக சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது அதிகாரபூர்வமாக எதுவும் உறுதியாகவில்லை. இது குறித்து முழு தகவல்களும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவர் பெரியார் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தகது. இந்த படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடிப்பாரா என்று பலரது கேள்வியும் உள்ளது.