Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் வீட்டில் மயில் தோகை வைத்துள்ளீர்களா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

peacock feather vastu in Tamil

xr:d:DAF5LQtmKHo:20,j:1305332730518168395,t:24010711

peacock feather vastu in Tamil: முன்பெல்லாம் நாம் பள்ளிக்கூடங்களில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது புத்தகத்தின் நடுவே மயிலிறகை வைத்திருப்போம். அந்த மயிலிறகு குட்டி போடும் என்று எண்ணிக் கொண்டு தினந்தோறும் அதனை எடுத்து எடுத்துப் பார்ப்போம். இது 80ஸ், 90ஸ், காலத்தில் படித்த பிள்ளைகளுக்கு நன்றாக தெரியும்.

மயில் நமது நாட்டின் தேசிய பறவையாக கருதப்படுகிறது. மேலும் ஆன்மீக ரீதியாக பார்த்தோம் என்றால் மயில் பஞ்சபட்சிகளில் ஒரு பறவையாக உள்ளது. மேலும் முருகப்பெருமானின் வாகனமாக இது உள்ளது. ஆன்மீகம் வாய்ந்த மயிலின் மயில் தோகையை நம் வீடுகளில் வைத்தால் நன்மையா? அதன் மூலம் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

மயிலிறகு

பொதுவாக அனைவருக்கும் மயிலை பார்த்தால் அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். மேலும் அது தோகை விரித்து ஆடும் பொழுது அதனை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். எனவே மயில் தோகையை பார்க்கும் பொழுது நமக்கு ஒரு நேர்மறையான ஒரு ஆற்றல் கிடைக்கிறது. இதனால் நமது மனம் மகிழ்ச்சியடைகிறது. எனவே மயில் தோகையை வீடுகளில் வைப்பது நல்லது தான். அதனை தினந்தோறும் பார்க்கும் பொழுது நமக்கு நேர்மறையான ஆற்றல் கிடைக்கிறது.

மேலும் மயில் தொகையை வீடுகளில் வைக்கும் பொழுது எந்த ஒரு விஷ ஜந்துக்களும் வீட்டிற்குள் நுழையாது. பாம்பும் கூட நுழையாது.

மயில் தோகையை நீங்கள் பூஜை அறைகளில் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். அதனால் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.

மேலும் மருத்துவ துறையிலும் கூட மயில் தோகை பயன்படுகிறது. ஏதேனும் அடிபட்டு காயம் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு மயில் தொகையை வைத்து நீவி விடுவது, அதன் மூலம் மருந்து வைத்து மெதுவாக, மென்மையாக வருடுவதின் மூலம் சீக்கிரம் குணமாகும் என்பது நாம் அனைவரும் அறிந்தது.

மேலும் அந்த காலத்தில் மயில் தோகை வைத்து மன்னர்களுக்கு விசிறி விடுவார்கள். அதிலிருந்து நேர்மறையான ஆற்றல் கிடைக்கும் என்பதால் அந்தக் காலத்தில் மயில் தோகையால் ஆன விசிறிகளை பயன்படுத்தி வந்தார்கள். இன்றும் கோவில்களிலும் மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற ஆட்டங்கள் உள்ளன. இதில் மயிலாட்டமும் விசேஷமான ஒன்று. இந்த மயிலாட்டத்தில் மயில் தோகையால் செய்யப்பட்ட உபகரணத்தை வைத்து ஆடுவார்கள். இதனால் அங்கு சுற்றி உள்ள மக்களுக்கு ஒரு நல்ல நேர்மறையான ஆற்றல் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் மயில் தோகை தாரளமாக வைத்துக் கொள்ளலாம். இது இந்து மதங்களில் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களும் மயில் தோகையை வைத்து பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். ஏதேனும் பில்லி, சூனியம் ஏற்பட்டால் அல்லது அவர்கள் தூபம் போடும் பொழுது கூட மயில் தொகை வைத்து தான் போடுவார்கள். இவரான மயில் தொகையை தாராளமாக வீடுகளில் வைத்து வழிபடலாம்.

மேலும் படிக்க: கண் திருஷ்டியை போக்க கற்றாழை இருக்கு..!! ஆனால் வீட்டு வாசல் முன் கற்றாழை வைத்தால் ஆபத்து..!!

Exit mobile version