சேலம் மாவட்டத்தில் 16 கடைகளுக்கு அபராதம்! காரணம் என்ன தொழிலாளர் உதவியாளர் ஆணையர்  வெளியிட்ட அறிவிப்பு!

0
233
Penalty for 16 shops in Salem district! What is the reason for the notice issued by the Labor Assistant!

சேலம் மாவட்டத்தில் 16 கடைகளுக்கு அபராதம்! காரணம் என்ன தொழிலாளர் உதவியாளர் ஆணையர்  வெளியிட்ட அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் மு கிருஷ்ணவேணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் சேலம் மாவட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டார்கள் மீறப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து புகார் எழுந்த  வண்ணம் உள்ளது. மேலும் அந்த புகாரின் பேரில் சேலம் புதிய பேருந்து நிலையம், செவ்வாப்பேட்டை, சேலம் பழைய பேருந்து நிலையம், ஆத்தூர், மேட்டூர், அயோத்தியபட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்

.அதனையடுத்து  மாதந்தோறும் சட்டமுறை எடையளவு  சட்டம் 2009 மற்றும் சட்டமுறை எடையளவு பொட்டல பொருட்கள் விதிகள் ஆய்வு நடத்தப்பட்டது எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இறக்குமதி சிகரெட் லைட்டர் விற்பனை செய்யும் கடைகள் என முப்பது கடைகள்  மற்றும் நிறுவனங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும்  நான்கு கடைகளில் விதி மிரல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து 16 கடைகளுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்கப்பட்டது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் வணிக நேரத்திற்கு விற்பனை செய்யப்படும் பொட்டலத்தின் மேல் உரையில் இறக்குமதி செய்யப்பட்ட பொட்டல பொருட்களின் இறக்குமதி ஆளர் பொட்டலம் விடுபவர் ,பொருளின் பொது பெயர், பொருளின் நிகர எடை மற்றும் தயாரிப்பு தேதி, தயாரிப்பு மாதம், தயாரிப்பு வருடம், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் மற்றும் நுகர்வோர் நலன் தொலைபேசி எண் , மின்னஞ்சல் முகவரி போன்றவைகள் அச்சிடப்பட வேண்டும். மேலும் எந்த ஒரு விவரமும் அச்சிடப்படாமல் பொருட்களை விற்பனை செய்பவரின் மீது சட்டப்படியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.