Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம்! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

Penalty for violating restrictions again! Do you know in which district?

Penalty for violating restrictions again! Do you know in which district?

இனி கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம்! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

இரண்டு ஆண்டுகளாக குறைந்த அளவில் அதிகம் காணப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இப்போதுதான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில்,அனைத்து நிறுவனங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. எவரும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாததால்  கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.சில  வாரங்களுக்குப் பிறகு   தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தற்போது காஞ்சிபுரத்தில் தொற்று பாதிப்பானது சற்று அதிகமாக காணப்படுவதால் ஆட்சியர் ஆர்த்தி அவர்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அந்த கட்டுப்பாட்டில் ஒவ்வொருவரும் கட்டாயமாக முககவசம்  அணிந்திருக்கவேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்,ஒவ்வொரும் 6அடி இடைவெளி விட்டு பேசவோ அல்லது நடக்கவோ வேண்டும். என்றும் மேலும் நுழைவாயிலை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து உடல்நிலை வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும். வணிக வளாகம் மற்றும் கடைகளில் குளிர்சாதன பெட்டி இயங்குவதை தவிர்க்க வேண்டும். 50 நபர்கள் மட்டும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழி முறைகளை மீறினால் கட்டாயம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும்  உத்தரவிட்டார்.

Exit mobile version