Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சட்டசபையில் கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்! ஆதாரம் இருக்கிறதா உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் ஸ்டாலின் அதிரடி பதில்!

சென்னையில் இருக்கின்ற அண்ணா நூலகம் போல மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நூலகம் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி கட்டப்படுவதால் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் குறித்து இன்றைய தினம் நடந்த கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது குறிப்பிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

பென்னிகுயிக் வீட்டை மாற்றி கலைஞர் நூலகம் அமைக்க இருப்பதாக தகவல் கிடைக்கின்றது என்று அவர் தெரிவித்த உடன் குறிப்பிட்டு பேசிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் எவ்வளவு குறுக்கீடு வந்தது என்பது நெஞ்சில் இருக்கிறது. ஆனாலும் நேற்று முதல் அமைச்சர் குறுக்கிட வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார். பென்னிகுயிக் வாழ்ந்த இல்லத்தை மாற்றி கலைஞர் இல்லம் அமைக்கப்படவில்லை தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.

அவரை அடுத்து உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பென்னிகுயிக் நிலத்தை அப்புறப்படுத்திவிட்டு கலைஞர் நூலகம் கட்டுவதாக உறுப்பினர் தெரிவிப்பது தவறான கருத்து. அது பென்னிகுயிக் இல்லம் என்பதற்கான ஆதாரம் இருந்தால் அரசு அடிபணிய தயாராக இருப்பதாகவும், ஆதாரமில்லாமல் எதுவும் இன்றி தெரிவிக்க வேண்டாம் எனவும், ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து உரையாற்றிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செவி வழியாக வந்த செய்தியைப் பதிவு செய்தேன் என்று தெரிவித்தார். இதற்கு பதில் தெரிவித்த முதலமைச்சர் செவிவழிச் செய்திகளை பேரவையில் பதிவு செய்வது எந்த வகையிலும் பொருந்த தக்கது அல்ல என்று குறிப்பிட்டார். அதோடு இதுபோன்ற செய்திகளை பேரவையில் வெளியிடுவது செல்லூர் ராஜுவின் மான்பை குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

Exit mobile version