Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 18 ஆயிரமாக உயர்வு – தமிழக முதல்வர் அறிவிப்பு

MK Stalin - Latest Political News in Tamil1

MK Stalin - Latest Political News in Tamil1

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 18 ஆயிரமாக உயர்வு – தமிழக முதல்வர் அறிவிப்பு

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார். தேசிய கொடியை ஏற்றிய பிறகு அங்கு அவர் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.இந்த 75 வது சுதந்திர தின விழாவில் கொடியேற்ற வாய்ப்பளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி.விடுதலைக்காகப் போராடிய மண் நமது தமிழ் மண். பூலித் தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், தில்லையாடி வள்ளியம்மை, திருவிக, நாமக்கல் ராமலிங்க, பாரதிதேசன், திருப்பூர் குமரன், ஜீவா, கேப்டன் லக்‌ஷ்மி, கே.பி.சுந்தராம்பாள் எனப் பல தலைவர்களின் மூச்சுக் காற்றால் கட்டப்பட்டது தான் இந்த சுதந்திர நினைவுத் தூன். இவர்கள் தமிழக தியாகிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் தியாகிகள் என்று தெரிவித்தார்.

மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளைப் போற்றும் மண் தமிழகம். அந்த வகையில், விடுதலைப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியமானது ரூ. 17 ஆயிரத்திலிருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் மேலும் 1000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 9000 ரூபாயாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

Exit mobile version