பெருகி வரும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்!! நடவடிக்கை எடுப்பார்களா?? அதிகாரிகள்!!

0
97
People are afraid of the increasing stray dogs! Will they take action?? Officers!!

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்!! நடவடிக்கை எடுப்பார்களா?? அதிகாரிகள்!!

பெருகிவரும் நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

காட்டில் உள்ள விலங்குகள் தான் மனிதர்களை தாக்கும் என்ற நிலை மாறி தற்போது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் முதற்கொண்டு மனிதர்களை தாக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்தேறி வருகின்றன.

அதிலும் குறிப்பாக தெருவில் சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் ஏராளமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நாய்களால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். சமீபத்தில் தலைநகர் டெல்லியில் வாக்கிங் சென்ற மருத்துவர் ஒருவரை தெரு நாய்கள் கடித்தே கொலை செய்தன. அதேபோல் வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி ஒருவரை தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாய்கள் பலத்த காயம் ஏற்படும் அளவு கடித்துள்ளன. அருகில் உள்ளவர்கள் நாய்களை வந்து விரட்டவே அந்த சிறுமி காப்பாற்றப்பட்டாள்.

இதுபோல கணக்கில் வராத ஏராளமான தொல்லைகளும் தெருவில் சுற்றி தெரியும் நாய்களால் ஏற்படுகின்றன.  திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட பஜார் சாலை, அச்சரப்பாக்கம் சாலை, சன்னதி தெரு, காந்தி சாலை, தெற்கு போலீஸ் நிலையம், தாலுக்கா அலுவலகம், போன்ற இடங்களில் கூட்டம் கூட்டமாக தெருவில் சுற்றி தெரியும் 30க்கும் மேற்பட்ட நாய்களால் பொதுமக்கள் ஏகப்பட்ட இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

கூட்டமாக இருக்கும் நாய்களால் பொதுமக்கள், மாணவிகள், குழந்தைகள் ஆகியோர் நடந்து செல்லும் பொழுது பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் இரவு நேர பணி முடிந்து வீட்டுக்கு செல் திரும்பும் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமாக இருக்கும் நாய்களை பார்த்து பயத்துடனே கடக்கும் நிகழ்வுகளும் உண்டு.

மாணவ மாணவிகளும் பள்ளி நேரங்களில் செல்லும் பொழுது கூட்டம் கூட்டமாக வரும் நாய்களைக் கண்டு அச்சத்துடனே பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலர்கள் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அவற்றிற்கு கருத்தடை முறைகளை பயன்படுத்தி இனப்பெருக்கம் செய்து பெருகாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.