அதிரடியாக பரவும் தொற்று அதிர்ச்சியில் மாநில அரசு! மக்களே உஷார்!

0
109

தமிழ்நாட்டிலே கொரோனா தொடங்கியதிலிருந்து அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருக்கு மத்திய அரசும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தது.

முழு நேர ஊரடங்கு மற்றும் முககவசம் அணிவது போன்ற கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பரிசோதனையை அதிகப்படுத்துதல் மற்றும் மத்திய அரசிடமிருந்து அனைத்து உதவிகளையும் கேட்டுப்பெறுவது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது போன்ற பல அதிரடி நடவடிக்கை காரணமாக, இந்த தொற்று தமிழகத்தில் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ஆனால் தற்சமயம் இந்த நோய் தொற்று படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கான தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 618 பேருக்கு இந்த தொற்று உறுதியாகி இருக்கிறது. நேற்றைய தினம் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பெண்கள் 2626 பேரும், ஆண்கள் 3992 பேரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் இதுவரையில் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 33 ஆயிரத்து 434 என்று சொல்லப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் இதுவரையில் மொத்தம் இரண்டு லட்சத்து 65 ஆயிரத்து 126 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் இதுவரையில் இந்த தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பினோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 571 என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தவர்களில் 35 பேருக்கு இந்த தொற்று உறுதியாகியிருக்கிறது தமிழக அரசு அனுமதி கொடுத்த பின்பு பக்கத்து மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமானம் மற்றும் சாலை மற்றும் ரயில் மூலமாக வருகை தந்தவர்கள் 38 லட்சத்து 86 ஆயிரத்து 674 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் இரண்டாயிரத்தி 314 பேர் இதுவரையில் தமிழகத்தில் மொத்தமாக இந்த நோயிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் அவர்களின் எண்ணிக்கையானது 8 லட்சத்து 78 ஆயிரத்து 521 நபர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்றைய தினம் இந்த தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரையில் மொத்தமாக இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 908 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டும் நான்காயிரத்து 324 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 2124 நபர்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.